Posts

Showing posts from December, 2017

அஜித்தை நிவின் பாலி சந்தித்தது ஏன், பின் என்ன நடந்தது- சுவாரஸ்ய தகவலை கூறிய நிவின் பாலி

Image
கடந்த வருடம் மலையாள சினிமா காத்து தமிழ் சினிமாவில் அதிகம் வீசியது. அதற்கு முழு காரணம் ஒரே ஒரு படம், அது நிவின் பாலி நடித்த பிரேமம். இந்த படத்தை பார்த்த அஜித்-ஷாலினி, நிவின் பாலியை தங்களது வீட்டிற்கு அழைத்து பாராட்டியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பதை நிவின் பாலி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இருவருக்கும் பிரேமம் படம் பிடித்துபோக என்னை வீட்டிற்கு அழைத்தார்கள். அப்போது அஜித் அவர்களே பிரியாணி போன்ற சில உணவுகளை எனக்கு பரிமாறினார், சாப்பிட்ட தட்டை கூட எடுக்கவிடாமல் அவரே எல்லா விஷயங்களையும் செய்தார். பிறகு அடுத்த படம் என்ன, எப்படி கதைகள் தேர்ந்தெடுக்கலாம் என சினிமா பற்றி அஜித் பேசியதாக கூறியுள்ளார்.